Home உலக செய்திகள் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள்.. அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள்.. அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி

by admin

இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நிழல் யுத்தம் தீவிரமடைந்து நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தியது. அவற்றை அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் முறியடித்தது. இந்த தாக்குதல் காரணமாக, இரு நாடுகளிடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது.

ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கில் பெரிய அளவிலான போருக்கு வழிவகுக்கும் என்ற கவலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy