Home இந்தியா செய்திகள் சிறுபான்மையினரை கொல்வோம் என்ற முழக்கம் செங்கோட்டையிலிருந்தே வரலாம்”

சிறுபான்மையினரை கொல்வோம் என்ற முழக்கம் செங்கோட்டையிலிருந்தே வரலாம்”

by admin

நிதி மந்திரி நிர்மலாவின் கணவர் பரகலா பிரபாகர் எச்சரிக்கை

“சிறுபான்மையினரை கொல்வோம் என்ற முழக்கம் செங்கோட்டையிலிருந்தே வரலாம்” என்று நிதி மந்திரி நிர்மலாவின் கணவர் பரகலா பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘இந்து’ குழுமத்தின் இயக்குநர் என். ராம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் ஆய்வாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற இக்கருத்தரங்கில் பொருளாதார நிபுணரும், ‘தி க்ரூக்கட் டிம்பர் ஆப் நியூ இந்தியா’ புத்தகத்தின் ஆசிரியரும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவருமான பரகலா பிரபாகர் ‘இன்றைய அரசியல் நிலை’ குறித்து சிறப்புரையாற்றினார். அந்த உரையின் முக்கியப் பகுதிகள்:

10 ஆண்டு மோடி ஆட்சியில் ஒரு விஷயம் கூட நல்லதே இல்லையா? ஏன் அதைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை? என்று, என் நண் பர்கள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொன்ன பதில்: ஒரு நோயாளி இதய மருத்துவரிடம் போகிறார். மருத்துவர் அவரைப் பரிசோதித்து விட்டு அவர் இதயம் பலவீனமாக உள்ளது என்று சொல்கிறார். அதற்கு அந்த நோயாளி, ‘என் கைகள், கால்கள் நன்றாக இருக்கின்றன; கண்கள் நன்றாக தெரிகின்றன; மூக்கு நன்றாக உள்ளது. காது நன்றாக கேட்கிறது’ என்று பதில் சொன்னால் எப்படி இருக்கும்?

நான் பிரச்சினையின் இதயத்தைப் பார்க்கி றேன். எனக்கு பத்தாண்டு கால மோடி ஆட்சியில் உள்ள அவலங்கள் தெளிவாக தெரிகின்றன. கை, கால், கண், மூக்கு, காது நன்றாக உள்ளது என்று சொல்வதற்கு பல ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் 140 கோடி மக்கள் திண்டாடுகிறார்கள் என்பதை என் போன்ற சில இதய மருத்துவர்கள் மட்டும் தான் பேசுகிறோம்.

விலைவாசி விண்ணை முட்டுகிறது. அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்தார்களே பார்த்தீர்களா என்று என்னிடம் சிலர் கேட்டனர். நான் எதற்கு அதைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்? நான் மாதா மாதம் மளிகைச் சாமான் வாங்கும் போதும், வாரா வாரம் காய்கறிகள் வாங்கும் போதும் விலைவாசி உயர்வு எனக்கு நேரடியாக தெரிகிறதே.. சென்ற டிசம்பர் மாதத்திற்கும் இன்றைக்கும் ஒப்பிட்டாலே மளிகை சாமான்கள் 12 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளன. காய்கறிகள் 20 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளன. ஆனால் புள்ளி விவரம் என்ற பெயரில் மக்களைக் குழப்புவதில் இந்த அரசு வல்லமை படைத்தது. கடந்த 4 காலாண்டுகளில் மிகக் குறைந்த பணவீக்கம் என்று சொல்வார்கள். உள்ளே செய்தியைப் படித்தால் மொத்த விலைவாசி குறியீட்டெண் 6.9 சதவிகிதம் என்பதிலிருந்து 6.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பார்கள். இதனால் மக்களுக்கு என்ன பயன்?

நாட்டில் தற்போது பொருளாதார ஏற்றத் தாழ்வு வரலாறு காணாத வகையில் கடுமையாக அதிகரித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததை விட கூடுதலாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அது தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. 1 சதவிகித பெரும்பணக்காரர்கள் 22 சதவிகித வருமானத்தை அபகரிக்கிறார்கள்; அவர்களிடம் நாட்டின் மொத்த சொத்தில் 44 சதவிகிதம் குவிந்துள்ளது. ‘உனக்கு ரேசனில் 5 கிலோ அரிசி தருகிறேன்; என் நண்பனுக்கு 5 ஏர்போர்ட் தருகிறேன்’ என்ற வகையில் தான் இந்த ஆட்சி செல்கிறது.

பல லட்சம் கோடி அரசு வருவாயை விட்டுக் கொடுத்து கார்ப்பரேட் வரியை குறைக்கிறார்கள். வங்கியில் கார்ப்பரேட் வராக்கடன் லட்சக்கணக்கான கோடி ரூபாயை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனாலும் உள்நாட்டு முதலீடு வருவதில்லை. வேலைவாய்ப்பு உருவாவதில்லை. இந்த ஏற்றதாழ்வு எப்போதும் இருக்கும்; இதனால் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ள முடியாது; நான் நன்றாக தூங்குகிறேன்” என்கிறார் நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா. “ஏற்றத்தாழ்வு பொருளாதாரத்திற்கு நல்லது” என்கிறார் பிரதம மந்திரியின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன். இவர்கள்தான் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையினை உருவாக்கி நடத்துபவர்கள்.

வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் உச்சத்தை தொட்டுள்ளது. 24 சதவிகித இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். அதில் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 40 சதவிகிதம் பேர். படித்த இளைஞர்கள் 65 சதவிகிதம் பேர். ரயில்வே துறையில் 35 ஆயிரம் தூய்மைப் பணி உள்ளிட்ட உடலுழைப்பாளர் பணியிடங்களுக்கு 1 கோடியே 25 லட்சம் இளைஞர்கள் விண்ணப் பிக்கின்றனர். இதுதான் இன்றைய யதார்த்தமான நிலைமை.

இஸ்ரேல் அரசு காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனத் தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டது. அந்த இடத்தில் ஆட்கள் வேண்டி பல நாடுகளிடம் கோரிக்கை வைத்தது. நமது பிரதமரும், இஸ்ரேல் நாட்டு பிரதமரும் ‘வாடா போடா நண்பர்கள்’ என்று நினைக்கிறேன். உடனே நமது அரசு களத்தில் இறங்கி விட்டது. உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலிருந்து இளைஞர்கள் இந்த வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களி டம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்.

எங்கு போகிறீர்கள் என்று தெரியுமா? தெரியும். இஸ்ரேல் செல்கிறோம். அங்கே சண்டை நடக்கிறதே தெரியுமா? தெரியும். குண்டு மழை பொழிகிறது; அதில் நீங்கள் கொல்லப்படலாம் என்று தெரியுமா? தெரியும். பின் ஏன் செல்கிறீர்கள்? இங்கு வேலை இல்லாமல் தினம் தினம் சாவதைவிட அங்கு போய் இருக்கும் காலம் வரை வாழ்ந்து, வீட்டுக்கும் பணம் அனுப்பலாம். குண்டடிபட்டு செத்தால் பரவாயில்லை என்கிறார்கள். இதுதான் நம் இளைஞர்கள் நிலை.

ஒரு நாள் காலை ஹைதராபாத்தில் நாங்கள் அதிர்ச்சியில் கண் விழித்தோம். உக்ரைனில் இருந்து ஓர் இளைஞரின் சடலம் விமானம் மூலம் வந்திறங்கியது. அப்போதுதான் எனக்கு தெரிந்தது சத்தம் போடாமல் மோடி அரசு உக்ரைனுக்கும் வேலை செய்ய ஆட்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று. இதிலிருந்து வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சத்தை புரிந்து கொள்ளலாம்.

நமது ஜனநாயகம் மிகப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. பிரதமரின் நண்பர் களுக்கு ஆதரவான 3 வேளாண் சட்டங்கள் இரு அவைகளிலும் 5 நிமிடங்கள் கூட விவா திக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டன. அதனை எதிர்த்து விவசாயிகள் வெயில், மழை, குளிர், கொரோனா பெருந்தொற்று என்று பாராமல் கடு மையாக போராடினார்கள். அவர்களைப் பிரதமர் மோடி, ‘போராட்டத்தையே தொழிலாகக் கொண்ட வர்கள், நகர்புற நக்ஸலைட்டுகள், காலிஸ்தானி தீவிரவாதிகள், நாட்டை துண்டாடுபவர்கள்’ என்று பலவாறாக சாடினார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்திற்கு அடிபணிந்து பஞ்சாப் தேர்த லுக்கு சில காலம் முன்பு நாடாளுமன்றத்தில் இந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. இப்போதும் எந்த விவாதமும் இல்லை. சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை எதிர்த்து கடுமையான வார்த்தைகளில் சாடிய மோடியே அதை வாபஸ் வாங்கிவிட்டார். அப்படியானால் அவர் யார்? போராட்டத்தை தொழிலாக கொண்ட வரா? அர்பன் நக்ஸலைட்டா? காலிஸ்தானி தீவிர வாதியா? நாட்டை துண்டாடுபவரா?

பாஜக வலைப்பக்கத்தில் போய் பார்த்தால் உலகத்திலேயே பெரிய கட்சி என்று பதிவிட்டி ருப்பார்கள். இந்தியாவில் அல்ல; உலகத்திலேயே பெரிய கட்சி. அந்த கட்சியில் இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மையினருக்கு இடமில்லை. உத்தரப்பிரதேசம் இந்தியாவில் மக்கள்தொகையில் மிகப்பெரிய மாநிலம். அங்குதான் மிக அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் உள்ளனர். அங்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை.

அதேபோல் குஜராத்தில், கர்நாட கத்தில் என்று பட்டியல் நீள்கிறது. இவர்கள் இஸ்லா மியர்களுக்கு சீட்டுக் கொடுத்து அவர்கள் தோற்க வில்லை. அவர்களுக்கு போட்டியிட சீட்டே கொடுக்க வில்லை. இந்த கட்சிதான் நம் நாட்டை பத்தாண்டு களாக ஆண்டு கொண்டிருக்கிறது. பெரும் பான்மை மதவாதத்தை முன் நிறுத்தி ஒரு கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சில சிறு கும்பல்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பொருளாதார தடை, கும்பல் கொலை, அவர்கள் இல்லத்தை குறி வைத்தல், ஆயுதம் ஏந்துதல் என்று குரல் கொடுக்கின்றன. கூடவே தில்லி சாலைகளிலேயே “ஜெய் ஸ்ரீராம்

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy