Home விளையாட்டு செய்திகள் 12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

by admin

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 12-ஆவது சுற்றில், இந்தியாவின் குகேஷ், வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்கள். இதர இந்தியர்களான பிரக்ஞானந்தா, கோனெரு ஹம்பி டிரா செய்தனர். விதித் சந்தோஷ் பேபியானோ கருனாவிடம் தோல்வியுற்றார்.

12ஆவது சுற்றின் ஒபன் பிரிவில், குகேஷ் – அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை வீழ்த்தினார்.

ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா டிரா செய்து அசத்தினார். அமெரிக்காவின் ஹிகரு நகமுரா – பிரான்ஸின் ஃபிரெஸோ அலிரெஸாவையும் வீழ்த்தினர். அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா -இந்திய வீரர் விதித் சந்தோஷை வீழ்த்தினார்.

14 சுற்றுகள் கொண்ட போட்டிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி. 12ஆம் சுற்று முடிவில் இந்திய வீரர் குகேஷ், அமெரிக்காவின் ஹிகரு நகமுரா, ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியுடன் 7.5 புள்ளிகளுடன் மூவருமே முதலிடத்தில் சமநிலையில் உள்ளார்கள்.

தமிழக வீரர் பிரக்ஞானந்தா 6 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் மற்றுமொரு இந்திய வீரரான விதித் சந்தோஷ் 5 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

மகளிர் பிரிவில் வைஷாலி அன்னா முஸிஷுக்கினை வீழ்த்தினார். மகளிர் பிரிவில் டான் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். கொனேரு ஹம்பி 6 புள்ளிகளுடன் 3வது இடத்தினை 3 வீராங்கனைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். வைஷாலி 5.5 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy