Home விளையாட்டு செய்திகள் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

by admin

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமை இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய தொடர்களை வெல்ல தனிநபர் சிறப்பாக செயல்படுவதைக் காட்டிலும் ஒரு அணியாக இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்டில் அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவார்களா என எனக்குத் தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் நாம் வெளியில் பார்ப்பதைக் காட்டிலும் அணிக்குள் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருப்பதாக நினைக்கிறேன். சிறந்த வீரர்கள் பலரை அணியில் வைத்துக் கொண்டு மும்பை அணி தொடர்ச்சியாக வெற்றி பெறத் தவறுகிறது.

அணியில் அவர்களுக்குள் ஒற்றுமையில்லை என நினைக்கிறேன். அந்த அணியில் ஏதோ ஒரு விஷயம் தவறாக இருக்கிறது. அவர்கள் ஒன்றாக இணைந்து அணியாக விளையாடவில்லை. தனிநபர்கள் சிறப்பாக செயல்பட்டால் மும்பை அணியால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முடியும். ஆனால், இது போன்ற பெரிய தொடர்களை வெல்ல வேண்டுமென்றால் தனிநபரின் செயல்பாடுகளைக் காட்டிலும் ஒரு அணியாக ஒற்றுமையாக செயல்படுவது அவசியம் என நினைக்கிறேன் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற அந்த அணி எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy