Thursday, November 26, 2026
spot_img
Homeகனடா செய்திகள்பென்டகனுக்கும் கனடிய அரசாங்கத்திற்கும் இடையில் தீவிரமடைந்துள்ள வார்த்தைப் போர்!

பென்டகனுக்கும் கனடிய அரசாங்கத்திற்கும் இடையில் தீவிரமடைந்துள்ள வார்த்தைப் போர்!

வட அமெரிக்கக் கண்டத்தைப் பாதுகாப்பதில் கனடா தனது இராணுவ முதலீடுகளைக் குவிக்காவிட்டால், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமெரிக்காவின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளதையடுத்து, பென்டகனுக்கும் கனடிய அரசாங்கத்திற்கும் இடையிலான வார்த்தைப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

கனடிய ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டதும், அமெரிக்க யுத்தத் திணைக்களத்தினால் வெளியிட அனுமதிக்கப்பட்டதுமான பின்னணி விளக்கமளிப்பொன்றின் போதே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான நிரந்தரக் கூட்டுப் பாதுகாப்புச் சபையை (PJBD) இடைநிறுத்தியதிலிருந்து, கனடிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் படிப்படியான அணுகுமுறையைத் தாம் கையாண்டு வருவதாக குறித்த அமெரிக்க அதிகாரி தெரிவித்திருந்தார்.

”வட அமெரிக்கப் பாதுகாப்பிற்கு முதலிடுவதற்கு கனடாவால் முடியாவிட்டால், மிகவும் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்துப் பரிசீலிப்பதைத் தவிர தமக்கு வேறு வழியில்லை” என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

நோராட் (NORAD) அமைப்பு உள்ளிட்ட பல விடயங்களில் அமெரிக்காவின் கரிசனைகளைக் கனடா பல ஆண்டுகளாகப் புறக்கணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பென்டகனின் விமர்சனங்கள் குறித்து பதிலளித்த கனடிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்குயின்டி (David McGuinty), “கனடா ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அது அமெரிக்காவிற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments