Thursday, November 26, 2026
spot_img
Homeகனடா செய்திகள்அல்பேர்ட்டாவில் சிறுவர் பாதுகாப்பு விவகாரம் – 69 இளைஞர்கள் உயிரிழப்பு!

அல்பேர்ட்டாவில் சிறுவர் பாதுகாப்பு விவகாரம் – 69 இளைஞர்கள் உயிரிழப்பு!

2025 – 2026 நிதியாண்டில் 69 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளதாக அல்பேர்ட்டா சிறுவர் மற்றும் இளைஞர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மற்றுமொரு சர்ச்சையாக, இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான விசாரணைகளுக்கான வயது வரம்பை 23 இலிருந்து 19 ஆக அல்பேர்ட்டா அரசாங்கம் குறைத்துள்ளது.

இதனால் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களின் மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஆணையாளர் டெர்ரி பெல்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களில் 74 சதவீதமானவற்றில் இளைஞர்களின் உண்மையான சூழ்நிலைகள் மற்றும் தேவைகள் முறையாக மதிப்பிடப்படவில்லை என்றும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, சிறுவர் பாதுகாப்புப் பணியாளர்களுக்குக் கட்டாய மேற்பார்வை, தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் சிறப்புப் பயிற்சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்துமாறு ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.

அரச பாதுகாப்பில் வளர்ந்த இளைஞர்களின் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், விசாரணைக்கான வயது வரம்பைக் குறைத்த முடிவை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments