Thursday, November 26, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடா இராணுவப் பொலிஸ் அதிகாரி மீது ஐந்து சேவைக் குற்றச்சாட்டுகள் பதிவு

கனடா இராணுவப் பொலிஸ் அதிகாரி மீது ஐந்து சேவைக் குற்றச்சாட்டுகள் பதிவு

கனேடிய ஆயுதப் படைகளின் இராணுவப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் மீது ஐந்து சேவைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சார்ஜன்ட் ஹரோல்ட் கியூபிலோஸ்-டெஜாடா என்பவருக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனுமதியின்றிப் பணியில் இருந்து விலகியிருந்தமை, உயர் அதிகாரியின் சட்டபூர்வமான கட்டளைக்குக் கீழ்ப்படியாமை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள், நல்லொழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டிற்குப் பாதகமான முறையில் நடந்துகொண்டமை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

எனினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விபரங்களை இராணுவப் பொலிஸார் வெளியிடவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து இராணுவப் பொலிஸ் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் வனேசா ஹன்ரஹான் கூறுகையில், சார்ஜன்ட் கியூபிலோஸ்-டெஜாடாவிற்கு எதிராகத் தொழில்முறை நடத்தை விதிகள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் பொலிஸ் கடமைகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

ந்தக் குற்றச்சாட்டுகள் மீதான வழக்குத் தொடரப்பட்டால், அது இராணுவ நீதித்துறை அமைப்பின் கீழ் விசாரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments