Friday, November 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பாராளுமன்றத்தில் கைக்குழந்தையுடன் உரையாற்றிய செனட்டர்!

பாராளுமன்றத்தில் கைக்குழந்தையுடன் உரையாற்றிய செனட்டர்!

அவுஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில், 6 மாதக் கைக்குழந்தை அலியாவை கையில் ஏந்தியபடி செனட்டர் பாத்திமா பேமன் உரையாற்றிய காட்சி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிஜிட்டல் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின்போது ஒரு கையில் குழந்தையை அணைத்தபடி, மற்றொரு கையில் மக்கள் குரலை அவர் முன்வைத்த விதம் பேசுபொருளாகியுள்ளது.

அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த செனட்டர் லிடியா தோர்ப் குழந்தையுடன் விளையாடி சிரித்த காட்சி, கடுமையான அரசியல் விவாதங்களுக்கு நடுவிலும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பிறந்து, எட்டு வயதில் அகதியாகக் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பாத்திமா பேமனின் வாழ்க்கைப் பயணம் எளிமையானதல்ல.

புதிய மொழி, புதிய நாடு, அடையாளச் சவால்கள் எனப் பல தடைகளைத் தாண்டி முன்னேறிய அவர், 2022-ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய கூட்டாட்சி பாராளுமன்றத்திற்குத் தேர்வான முதல் ஹிஜாப் அணிந்த பெண் செனட்டர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

2024-ஆம் ஆண்டில் ஆளும் லேபர் கட்சியிலிருந்து விலகி, ‘அவுஸ்திரேலிய வாய்ஸ்’ என்ற சொந்தக் கட்சியைத் தொடங்கிய பாத்திமா, பணிபுரியும் குடும்பங்கள், மலிவு விலை குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுவசதி போன்ற அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து பேசி வருகிறார்.

அதேசமயம் பதவியில் இருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்த முதல் மேற்கு அவுஸ்திரேலிய செனட்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அகதியாக வந்த சிறிய தொடக்கத்திலிருந்து பாராளுமன்றத்தின் முக்கியக் குரலாக உயர்ந்த பாத்திமா பேமனின் கதை, கனவு காணும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் “எந்தச் சூழலிலும் உன் அடையாளத்தையும் இலட்சியத்தையும் விட்டுக்கொடுக்காதே” என்ற உறுதியான நம்பிக்கையைத் தருகிறதாக சர்வதேச ஊடகங்க்கள் புகழ்ந்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments