Tuesday, August 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாட்டில் வெள்ள அபாயம் இல்லை! அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் அறிவிப்பு

நாட்டில் வெள்ள அபாயம் இல்லை! அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் அறிவிப்பு

நாட்டில் வெள்ள அபாயம் இல்லை! அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் அறிவிப்பு

நாட்டில் வெள்ள அபாயம் இல்லை! அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் அறிவிப்பு

நாட்டில் வெள்ள அபாயம் இல்லை! அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் அறிவிப்பு

தற்போது நாட்டில் எந்தப் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று தெரிவித்தார்.

நாட்டில் பெய்த மழைவீழ்ச்சி குறைந்துள்ளதைத் தொடர்ந்து, எந்தவொரு ஆற்றின் நீர்மட்டமும் விரைவாக உயரவில்லை என்பதுடன், வெள்ள அபாய நிலையும் ஏற்படவில்லை என அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக சுமார் 20 மில்லிமீற்றர் அளவில் களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல்நிலைப் படுகைப் பகுதிகளிலேயே பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

இதேவேளை, நேற்றைய தினம் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும் மழை பெய்தபோதிலும், அப்பகுதிகளில் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments