Sunday, September 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பேங்கொக்கில் கடும் வெள்ளம்

பேங்கொக்கில் கடும் வெள்ளம்

கனமழையால் பேங்கொக்கில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாய்லாந்து தலைநகர் ‘பேரிடர் பாதிப்புக்குள்ளான மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரத்தில் சுமார் 300 மில்லிமீற்றர் மழை பெய்ததால், முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல பகுதிகளில் மக்கள் இடுப்பளவு நீரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கனமழை தொடரக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில், கால்வாய்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு மாற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்காக தற்காலிக முகாம்கள் மற்றும் கள சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் தற்காலிகத் தங்குமிடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments