Sunday, September 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இத்தாலியில் புர்கா அணி தடை ; புதிய சட்டம் நிறைவேற்றம்

இத்தாலியில் புர்கா அணி தடை ; புதிய சட்டம் நிறைவேற்றம்

இத்​தாலி​யில் பாடசாலைகளில் புர்கா மற்​றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்​கும் சட்டம் நிறைவேற்​றப்​பட்​டது.

இதுகுறித்​து, இத்தாலிய பிரதமர் மெலோனி கூறுகை​யில், ‘‘பள்​ளி​களில் புர்கா மற்​றும் நிகாப் அணிவதற்​கான தடை என்​பது பாது​காப்பு தொடர்பான நடவடிக்​கை. ஒரு பெண் அல்​லது ஒரு சிறுமி, தனது முகத்தை மறைக்க கட்​டாயப்​படுத்​தப்​படும் போது, அவரது அடிப்படை உரிமை​களும், ஒருங்​கிணைப்​பும் மறுக்கப்படுகின்றன’’ என்​றார்.

இதே​போல், இத்​தாலிய மொழி​யில் போதிய திறன் இல்​லாத மாணவர்​களின் எண்​ணிக்​கையை ஒரு வகுப்​பில் 30 சதவீத​மாக கட்​டுப்​படுத்​தும் சட்​ட​மும் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

இதனால் இத்​தாலிய மொழியைக் கற்க கூடு​தல் வசதி​கள் ஏற்​படுத்​தப்​படும். ஒரு குழந்தை பள்​ளி​யில் ஒருங்​கிணைந்து கல்வி கற்​ப​தில் கடுமை​யான சிரமத்தை எதிர்​கொண்​டால், சமூக நலத்​துறை அதி​காரி​களுக்கு தகவல் தெரிவிக்​கப்​படும்.

மேலும், அந்​தக் குழந்​தை​யின் பெற்​றோர் இலவச இத்​தாலிய மொழிப் பயிற்சி வகுப்​பு​களில் கட்​டா​யம் பங்​கேற்க வேண்​டும் என்றும் இத்தாலிய பிரதமர் மெலோனி வலியுறுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments