Sunday, September 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எல் நினோ தீவிரம்: அக்டோபர் - நவம்பரில் இலங்கைக்கு வெள்ள அபாயம்!

எல் நினோ தீவிரம்: அக்டோபர் – நவம்பரில் இலங்கைக்கு வெள்ள அபாயம்!

எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைவதால், இலங்கை முழுவதும் மழைப்பொழிவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பசுபிக் சமுத்திரத்தில் வலுவடைந்து வரும் எல் நினோ காரணியும், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் எதிர்பார்க்கப்படும் வளிமண்டல மாற்றங்களுமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வறண்ட வானிலை நிலவிய பகுதிகளில் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிக்கு பிறகு இடி மின்னலுடன் கூடிய மழை அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மாலை 2 மணிக்கு பிறகு ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேநேரம், காங்கேசன்துறை முதல் புத்தளம் வரையிலும், மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50–55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

சிலாபம் முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதியில் அலைகள் 2 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும். அத்துடன் பேருவளை முதல் மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு மேலெழும் அபாயமும் உள்ளது.

இந்த ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டு, கடற்படையினர், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோரப் பகுதி மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை அதிகாரி மலித் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments