Thursday, November 26, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜயசிங்க தனது பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடம் வினவியபோது தெரிவிக்கப்பட்ட விடயங்கள்

அவர் இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ள போதிலும் தனது பதவிக்கான கடமைகளில் ஈடுபட்டு வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான சரியான காரணங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேல் மாகாண ஆளுநரினால் இப்பதவிக்கு காமினி ஜயசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

தனது பதவிக் காலத்தில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்துவதைத் தடுப்பதற்காகத் திடீர் சோதனைகளை முன்னெடுப்பதற்கு ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருந்தார்.மேலும் பஸ்களின் ஒழுக்கத்தையும் தரத்தையும் உயர்த்துவதற்கும் அவர் பல விசேட நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments