Sunday, September 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பாடசாலை தாக்குதல் - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பாடசாலை தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

அச்சுவேலி பகுதியில் இயங்கும் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தாக்குதல் காட்சிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த சீர்திருத்தப் பாடசாலையில் தங்கியுள்ள மாணவர்கள் சிலரை, மற்றுமொரு மாணவர் குழுவினர் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், குறித்த சீர்திருத்தப் பாடசாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments