Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்சூர்யா படத்திற்கு இசையமைக்கும் சுஷின் ஷியாம்!

சூர்யா படத்திற்கு இசையமைக்கும் சுஷின் ஷியாம்!

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா – 46 ஆக உருவாகும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

சூர்யா அடுத்ததாக ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுஷின் ஷியாம் இசையமைத்த கும்பளாங்கி நைட்ஸ், மஞ்ஞுமல் பாய்ஸ், ஆவேஷம் உள்ளிட்ட திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments