Saturday, October 31, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ரசிகர் மன்றத்தைத் தொடங்கினேனா?- ஜேசன் சஞ்சய் விளக்கம்

ரசிகர் மன்றத்தைத் தொடங்கினேனா?- ஜேசன் சஞ்சய் விளக்கம்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

விரைவில் கதாநாயகனாகவும் களமிறங்க போவதாக பேச்சு அடிபடுகிறது.

இது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக மாற, ஜேசன் சஞ்சய் அதை மறுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஜேசன் சஞ்சய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக வலைத்தளங்களை பொருத்தவரையில் எனது அதிகாரப்பூர்வ கணக்குகளை தவிர, பிற டிஜிட்டல் தளங்களில் என் பெயர், புகைப்படம் அல்லது எனது அடையாளத்தைப் பயன்படுத்தி இயங்கும் மற்ற அனைத்து கணக்குகளும், பக்கங்களும் முற்றிலும் போலியானவை.

எனவே மேலே குறிப்பிடப்படாத வேறு எந்தக் கணக்குகளிலிருந்தும் வரும் பதிவுகள், கருத்துகள், நேரடிச் செய்திகள் அல்லது வணிகத் தொடர்புகளுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல.

நாங்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றத்தையோ அல்லது சமூகக் குழுவையோ தொடங்கவில்லை அல்லது அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments