Saturday, October 31, 2026
spot_img
Homeகனடா செய்திகள்சிறுவர்கள் உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்

சிறுவர்கள் உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்

மொன்றியல் நகரில் அமைந்துள்ள ‘பேட்ச்வே இளையோர் மற்றும் குடும்ப மையங்களின்’ (Batshaw Youth and Family Centres) பராமரிப்பில் இருந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அப்பிரிவைச் சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் குறித்து சுயாதீன விசாரணை ஒன்றுக்கு கியூபெக் சுகாதாரத்துறை (Santé Québec) உத்தரவிட்டுள்ளது.

பராமரிப்பில் இருந்த 4, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உயிரிழந்தனர்.

இதில் இருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், மற்றைய சிறுமி புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்ததாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் கியூபெக் மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கியூபெக் மாகாணத்தின் பிரதான சுகாதார நிறுவனமான ‘சந்தே கியூபெக்’ (Santé Québec) சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, பேட்ச்வே நிறுவன ஊழியர்களிடம் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர்.

இளையோர் பாதுகாப்பு அமைப்பில் நிலவும் ஆள் பற்றாக்குறை, பணியாளர் பற்றாக்குறை, மற்றும் அலுவலகச் சுமை போன்ற நீண்டகாலச் சிக்கல்களே இதுபோன்ற துயரச் சம்பவங்களுக்குக் காரணம் என, தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments