சீனாவில், ஏழு ஆண்டுகளாகக் கோமா நிலையில் இருந்த கணவர் மீண்டும் கண் விழித்த நிலையில், தனது மனைவியிடம் “ஐ லவ் யூ” எனக் கூறிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஜாவோ என்பவருக்குச் சாங்மெய் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஜாவோ பணிபுரிந்த கிடங்கின் மேற்கூரையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூன்று வயதுக் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக அவர் துணிச்சலாகச் செயற்பட்டுள்ளார்.
குழந்தையைத் தனது மார்போடு அணைத்தபடி சுமார் 10 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில், ஜாவோவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
மருத்துவர்கள் நம்பிக்கை இழந்தபோதும் கைவிடாத மனைவி!
ஜாவோவின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மீண்டும் சுயநினைவுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகவு


