பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் கமில்லா ரகிமோவாவை எதிர்கொண்ட லெய்லா பெர்னாண்டஸ், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தார்.
கியூபெக் மாகாணத்தின் லாவல் பகுதியைச் சேர்ந்த லெய்லா பெர்னாண்டஸ், ஒரு மணித்தியாலம் 54 நிமிடங்கள் நீடித்த போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றியைத் தனதாக்கினார்.
இதனையடுத்து, மற்றைய அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் மற்றும் ஸ்லோவாக்கியாவின் மியா போஹன்கோவா ஆகியோரில் வெற்றிபெறும் வீராங்கனையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார்.
WTA 500 தரத்திலான இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கனடாவின் லெய்லா பெர்னாண்டஸின் இறுதிப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


