Saturday, October 31, 2026
spot_img
Homeகனடா செய்திகள்மொன்றியலில் வாகனம் மோதி சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

மொன்றியலில் வாகனம் மோதி சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

மொன்றியலின் Ahuntsic-Cartierville பகுதியில் வாகனம் மோதியதில் 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற சாரதியை மொன்றியல் பொலிஸார் தேடி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை நண்பகல் அளவில், Henri-Bourassa Boulevard மற்றும் Jeanne-Mance Street சந்திப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சைக்கிளில் சந்திப்பைக் கடந்துகொண்டிருந்த இளைஞரை, Jeanne-Mance வீதியில் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதாக முதற்கட்ட பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர சேவையினர் வருவதற்கு முன்னரே சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற சூழ்நிலைகள் தொடர்பாக மொன்றியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments