சினிமா ரசிகர்களுக்கு இந்த வார இறுதி மிகச் சிறப்பானதாக அமையவுள்ளது. தனுஷ், சுதீப் மற்றும் விக்ரம் பிரபு போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் நாளை (ஜனவரி 24) பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
முக்கியத் திரைப்படங்களின் பட்டியல்
1. தேரே இஷ்க் மே (Tere Ishk Mein) – Netflix தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், ‘ராஞ்சனா’ படத்தின் ஆன்மாவைத் தாங்கி வருகிறது. தனது காதலியின் கனவிற்காக ஒரு இளைஞன் ஐஏஎஸ் படித்து, பின் விமானப்படை அதிகாரியாக உயரும் உணர்ச்சிகரமான கதை இது. தனுஷ் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும்.
2. சிறை (Sirai) – ZEE5 விக்ரம் பிரபு ஒரு நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். தவாறாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு இளைஞனுக்கு நீதி வழங்கப் போராடும் ஒரு அதிகாரியின் த்ரில்லர் பயணமே இத்திரைப்படம்.
3. மார்க் (Mark) – JioHotstar கிச்சா சுதீப் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் வெளியாகிறது. 24 மணி நேரத்திற்குள் ஒரு சர்வதேச குற்றக் கும்பலை ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி எப்படி முறியடிக்கிறார் என்பதே இதன் விறுவிறுப்பான திரைக்கதை.
4. சீக்கட்டிலோ (Cheekatilo) – Amazon Prime Video சோபிதா துலிபாலா நடித்திருக்கும் இந்த தெலுங்கு த்ரில்லர், சமூக அநீதிகளைத் தோலுரிக்கும் ஒரு பாட்காஸ்டரைப் பற்றியது. மர்மமான கொலை வழக்கை அவர் எப்படித் துப்புதுலக்குகிறார் என்பது இதன் கதைக்கரு.
5. குஸ்தாக் இஷ்க் (Gustaakh Ishq) – JioHotstar விஜய் வர்மா மற்றும் பாத்திமா சனா ஷேக் நடித்துள்ள இத்திரைப்படம் 1990-களின் டெல்லி பின்னணியில் ஒரு கவித்துவமான காதல் கதையைப் பேசுகிறது.


