Home இந்தியா செய்திகள் குகேசுக்கு ரூ. 75 லட்சம் காசோலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

குகேசுக்கு ரூ. 75 லட்சம் காசோலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by admin

‘பிடே’ கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் 8 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு குகேஷ் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, குகேசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும், குகேசுக்கு 75 லட்ச ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy