Home உலக செய்திகள் டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்த நபரால் பரபரப்பு

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்த நபரால் பரபரப்பு

by admin

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கு இ;டம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளி;த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல் தனக்கு எதிராக தகவல்களை தெரிவிக்காமல் இருப்பதற்காக டொனால்ட் டிரம்ப் அவருக்கு பணம் வழங்கினாரா என்பது தொடர்பான நீதிமன்ற வழக்கு இடம்பெற்றுவந்த மான்ஹட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

சதிமுயற்சி குறித்த துண்டுபிரசுரங்களை எறிந்த பின்னர் அவர் தன்மீது திரவமொன்றை ஊற்றினார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர் நீதிமன்றின் பாதுகாப்பு மீறப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சிலவாரங்களிற்கு முன்னர் புளோரிடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து நியுயோக்கிற்கு வந்த மக்ஸ்வெல் அசரெலொ என்ற 37 வயது நபரே தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அவர் மீது இதுவரையில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிரம்;ப் தொடர்பான வழக்கு காரணமாக அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் காணப்பட்டனர் இந்த நபர் தீக்குளித்ததும் அவர்கள் உடனடியாக அங்கு விரைந்தனர் தீக்குளித்த நபர் கடும் எரிகாயங்களுடன் ஸ்டிரெச்சரில் கொண்டுசெல்லப்பட்டார் – அவரது நிலைமை ஆபத்தானதாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

 

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy