தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த 7 பேர் காரில் ஆந்திராவுக்கு சென்றுகொண்டிருந்தனர். ஆந்திராவின் திருப்பதி அருகே தொட்டப்பள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னே சென்ற கண்டெய்னர் லார் மீது கார் மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரம் இதுவரை வெளியாகவில்லை.