Monday, March 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்விபத்துகளை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறுவதா? – அமித் ஷா கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

விபத்துகளை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறுவதா? – அமித் ஷா கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ-171 (போயிங் 787 ட்ரீம்லைனர்), புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள பி.ஜே. மருத்துக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து குறித்து கூறும்போது, விபத்துகளை யாராலும் தடுக்க முடியாத எனக் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் உள்துறையின் கருத்து உணர்ச்சியற்றது என காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கண்டனம் தெரிவித்துள்ளார். விமானம் விபத்துக்குள்ளாகி மக்கள் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம பொறுப்புக்கூறல் உறுதிமொழியாவது அமித் ஷா வழங்கியிருக்க வேண்டும். விபத்துகளை யாராலும் தடுக்க முடியாது என்பது பொறுப்புக்கூறல் உறுதி மொழியின் தோல்வியாகும். எதையும் தடுக்க முடியாவிட்டால், நமக்கு ஏன் அமைச்சகங்கள் உள்ளன? விமான விபத்துகள் கடவுளின் செயல்கள் அல்ல. அவை தடுக்கக்கூடியவை. அதனால்தான் விமான ஒழுங்குமுறை அமைப்புகள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நெருக்கடி பதில் அமைப்புகள் உள்ளன. இவ்வாறு பவன் கெரா தெரிவித்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் “இதைத்தான் மத்திய உள்துறை அமைச்சர் இப்போது சொல்ல வேண்டுமா? இது மிகவும் உணர்ச்சியற்றது” எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments