ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில முதல்வர்களுடன் பேசியுள்ளார். இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல் தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது: மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் பெறப்படும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை. காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரில் அமைதியை உறுதி செய்ய மத்திய அரசு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்
நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை – சித்தராமையா
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on