பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்’ படத்தில் நடித்துள்ளார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 – வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 – வது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார். இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது. ஷோபனா மற்றும் மோகன்லால் ரீல் ஜோடியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள். துடரும் திரைப்படத்தை தருன் மூர்த்தி இயக்கியுள்ளார்.தரூண் மூர்த்தி இதற்கு முன் ஆப்ரேஷன் ஜாவா படத்தை இயக்கியவர் ஆவார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மோகன்லால் கடந்த சில ஆண்டுகளில் வெளியான மலைக்கோட்டை வாலிபன், பரோஸ், எம்புரான் ஆகிய திரைப்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் துடரும் படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார் என கூறலாம். இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். புக் மை ஷோ செயலியில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. மோகன்லாலின் கடைசி சில திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்பதால் துடரும் படத்தை ஓடிடி நிறுவனம் மிக குறைந்த விலைக்கும் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
துடரும்’ படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on