Saturday, April 26, 2025
spot_img
Homeசினிமா செய்திகள்இன்ஸ்டாவில் அசத்தும் ஏஐ கலைஞர் ஜெய் பிரபாகரன்!

இன்ஸ்டாவில் அசத்தும் ஏஐ கலைஞர் ஜெய் பிரபாகரன்!

சமூக வலைதளங்கள் பல திறமையாளர்களை உருவாக்குவதுடன் கலை ஆர்வம் கொண்டவர்களுக்கும் அடையாளத்தைப் பெற்றுக்கொடுக்கிறது. நவீன தொழில்நுட்பங்கள் உருவாக உருவாக, அதை தங்களின் திறன்களுக்கான கருவியாக மாற்றிக்கொள்பவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. அப்படி, ஏஐ தொழில்நுட்பத்தை ஜெய் பிரபாகரன் என்பவர் அபாரமான விதத்தில் பயன்படுத்தி வருகிறார்.

போலி முகங்களை உருவாக்குவது, கற்பனைத் திறனில் போலித்தனத்தைப் புகுத்துவது என இன்று பலரும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயனற்ற முறையில் உபயோகப்படுத்தும்போது ஜெய் பிரபாகரன் உலகளவிலுள்ள பலரையும் ஈர்க்கும் விதமாக அழகான வாழ்க்கை முறை, பண்டைய கால இந்திய மக்களின் வாழ்வியல், நூற்றாண்டுகளுக்கு முந்தைய இடங்கள் என தன் கற்பனையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அர்த்தமுள்ள காணொலிகளாக மாற்றுவதுடன் அதை ரசிக்கவும் வைக்கிறார்.

இவர் உருவாக்கிய தேநீர் தயாரிப்பு விடியோக்கள், கடலுக்கு அடியிலுள்ள துவாரகா என பல காணொலிகள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

லண்டனில் வசிக்கும் இந்தக் கலைஞரை இன்ஸ்டாவில் 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். எந்த விடியோவை இவர் வெளியிட்டாலும் அவை பல ஆயிரத்திற்கு மேற்பட்ட பகிர்வையும் பெறுவது இந்தத் துறையைச் சார்ந்த பிற கலைஞர்களுக்கும் நம்பிக்கையை அளித்து வருகிறது.

பல கோடி செலவில் ஏஐ என்கிற பெயரில் நம்பகத்தன்மையற்ற காட்சிகளை, கதாபாத்திரங்களை உருவாக்குபவர்கள் ஜெய் பிரபாகரன் போன்றவர்களைத் திரைத்துறையில் பயன்படுத்தலாம் என்பதே பலரின் விருப்பமாகவும் இருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments