தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பிரதீப் ரங்கநாதனை பற்றி நானி கூறியுள்ளார் அதில் ” கோமாளி திரைப்படம் வெளியான பிறகு என்னை வைத்து திரைப்படம் இயக்க பிரதீப் ரங்கநாதன் என்னிடம் கதை கூறினார். பிரதீப் ரங்கநாதனை அவரது தொடக்க காலத்தில் சந்தித்து இருந்தால் அவருடைய படத்தை கண்டிப்பாக தயாரித்திருப்பேன். ஆனால் இப்பொழுது அவர் மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார். புது முகம், புது எனெர்ஜி அடுத்த தலைமுறை சினிமா மக்கள் கொண்டாடுவது பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.”
பிரதீப் ரங்கநாதனின் முதல் படத்தை கண்டிப்பாக தயாரித்திருப்பேன் – நானி
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on