நிட்டம்புவை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயமடைந்துள்ள நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நிட்டம்புவை – ருக்கஹவில பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.
இவர் கடமைகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.