Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 93,915 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 816,191 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 136,535 ஆகும்.

மேலும், ரஷ்யாவிலிருந்து 102,273 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 81,130 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 57,947 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 43,005 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 48,024 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 33,957 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments