கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 300க்கும் அதிகமான ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கைத்தொலைபேசிகளின் சந்தைப் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா (5 கோடி ரூபா) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டவிரோத விற்பனை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.


