Saturday, September 5, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ரி20யில் இளம் வயதில் சதமடித்து உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க வீரர்

ரி20யில் இளம் வயதில் சதமடித்து உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க வீரர்

தென்னாப்பிரிக்காவின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் முழு உறுப்பினர் நாடொன்றுக்காக குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.

சிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ரி20 தொடரின் நேற்றைய போட்டியில் நமீபியாவை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடியது.

20 வயதான பிரிட்டோரியஸ் அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 101 ஓட்டங்களை விளாசினார். கானர் எஸ்டர்ஹுய்சன் 88 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் தென்னாப்பிரிக்கா 17 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் சதமடித்ததன் மூலம், சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் முழு உறுப்பினர் நாடொன்றுக்காக குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை பிரிட்டோரியஸ் தன்வசப்படுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments