Sunday, September 6, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நானுஓயாவில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நானுஓயாவில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நுவரெலியா, நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதான பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதான அன்பழகன் நிக்சன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

கிரகரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றுடன் சங்கமிக்கும் நானுஓயா ஆற்றுப் பகுதியில் குளிக்கச் சென்றபோதே இருவரும் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments