பொரலஸ்கமுவவில் 74 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை மஹரகம பொலிஸார் மீட்டுள்ளனர்.
பன்னிப்பிட்டிய, மஹல்வரவ பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகிலுள்ள நெல் வயலில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (05) மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (04) இரவு மாலினி புளத்சிங்ஹல மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த குறித்த முதியவர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ‘கொஸ்மல்லி’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் காசாளராக செயற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


