Friday, April 4, 2025
spot_img
Homeஉலக செய்திகள்டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?

டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் சில பொருள்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது. இது மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள், காஃபி, சாக்லேட் உள்பட பல பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பொருள்கள் மீது கடும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும் என்றும் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார். அதன்படி, இந்திய பொருள்களுக்கு 26 சதவிகித வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் 100 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் நேற்று ஆற்றிய உரையில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள பல நாடுகளில் 10 சதவிகித அடிப்படை வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்திய பொருள்களுக்கு சலுகையுடன் கூடிய வரிவிதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் காபி கொட்டைகளில் சுமார் 80 சதவிகிதம் லத்தீன் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. 2023 ஆம் ஆண்டிலிருந்து பிரேசில் 35 சதவிகிதம் மற்றும் கொலம்பியா 27 சதவிகிதத்தில் இருந்து வருகின்றன. இதனால், இரு நாடுகளுக்கும் 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளன.

சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோகோ பீன்ஸ், கோட் டி’ஐவோயர், ஈகுவடார் மற்றும் கானாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவைகளுக்கு முறையே 21 சதவிகிதம் மற்றும் 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் கோகோ வெண்ணெய் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து வருவதால் அவற்றுக்கு முறையே 32 சதவிகிதம் மற்றும் 24 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் காலணிகள் 37% இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 9.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சீனாவுக்கு 54% வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் ஒயின் வகைகளுக்கு 20 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் 2023 வரை அமெரிக்காவுக்கு

ஆடைகளை ஏற்றுமதி செய்வதில் சீனா மிகப்பெரிய நாடாக இருந்தது. இருப்பினும் வங்கதேசம் (37%), கம்போடியா (49%), இந்தியா (26%), இந்தோனேசியா (29%) மற்றும் பாகிஸ்தான் ஆகியவையும் அந்தப் பட்டியலில் இருக்கின்றன.

அமெரிக்காவில் வாங்கும் கார்களின் விலை 2,000 டாலர்கள் முதல் 5,000 டாலர்கள் வரை செலுத்த வாய்ப்புள்ளது. சில உயர் ரக மாடல்களுக்கு 20,000 டாலர்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments