நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வருகிற 9-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிவித்தார். மேலும் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான போராட்டம் முடிந்து விடவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,” ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இருமுறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு,மத்திய அரசின் அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களையும் அளித்த பின்னரும்ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமான நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கூட்டாட்சியியல் வரலாற்றில் இது ஒரு கருப்பு அத்தியாயம்! மக்களாட்சி முறைக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி. நீதியை நிலைநாட்டுவோம்! நீட்டை ஒழித்துக்கட்டும் போராட்டத்தைத் தொடர்வோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.