13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மோகன் பகான் – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள மோகன் பகான் 9 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 2 வெற்றி, 2 டிரா, 9 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது.