விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா, விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது . இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
குகேஷ், நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது 2024க்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நமது பாரா தடகள வீரர்கள் மற்றும் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருதுகள் கிடைத்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.நம் அனைத்து விளையாட்டு வீரர்களும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.