10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
முன்னதாக இந்த சீசனுக்கான குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஆன ககிசோ ரபாடா தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பினார். ஆனால் அவர் எப்போது இந்தியா திரும்பி மீண்டும் குஜராத் அணியில் இணைவார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. அவருக்கு மாற்று வீரரையும் குஜராத் நிர்வாகம் அறிவிக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் எப்போது அணியுடன் இணைவார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது.
இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும் நிகழ்வில் பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், “ரபாடா 10 நாட்களில் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.