பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச் – பிரான்ஸ் வீரர் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்