Thursday, January 9, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்பலாங்கொடையில் இருவருக்கிடையில் தகராறு ; ஒருவர் பலி ; சந்தேக நபர் கைது

பலாங்கொடையில் இருவருக்கிடையில் தகராறு ; ஒருவர் பலி ; சந்தேக நபர் கைது

இரத்தினபுரி, பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்தவரது மனைவி சந்தேக நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, சந்தேக நபர் உயிரிழந்தவரது மனைவியை சந்திப்பதற்காக வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, உயிரிழந்தவர் திடீரென வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது, தகாத உறவில் ஈடுட்ட பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments