இலங்கையின் மூத்த தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர், தமிழர்களின் அபிலாஷையை நிறைவேறும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பை உறுதி செய்யும்படி, இந்தியா இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியுள்ளார்.
க்க இந்தியாவிற்கு பயணத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு முகவரியிடப்பட்டு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் (எக்ஸ்) வெளியிட்டுள்ளார். “இலங்கை அரசியல் யாப்பில் 13ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவந்து 36 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தைப் பார்க்கும் போது இப்போது நிலைமை மோசமாக உள்ளது” என அந்த கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்கள், தெற்கிலுள்ள சிங்களவர்களுடன் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் 1987ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜெ.ஆர்.ஜயவர்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இடையே கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் தோல்வியடைந்தது என்பதே வரலாறு. அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த இலங்கை அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அந்த உடன்படிக்கையின் அடிப்படையில், இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்தடைந்தனர். நாட்டிலுள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தி, அமைதியை நிலைநாட்ட வந்த இந்தியப் படைகள், அதற்கு மாறாக தமிழர்களுடன் சண்டையிடும் ஒரு இராணுவமாக மாறி, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு, எந்த தமிழர்களை பாதுகாக்க வந்தார்களோ, அவர்களின் வெறுப்பை சம்பாதித்தன.
இலங்கையில் 1987-89 காலப்பகுதியில் இந்தியா முன்னெடுத்த அமைதி காக்கு படை நடவடிக்கையே, இதுவரை இந்திய வெளிவிவகார கொள்கையில் ஏற்பட்ட மிகப்பெரும் தோல்வியாக விமர்சிக்கப்படுகிறது.
‘இலங்கையில் அமைதியை ஏற்படுத்தவே’ உடன்படிக்கை என கூறப்பட்டு தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும், விடுதலைப் புலிகளை பலவந்தப்படுத்தியும் கைச்சாத்திட வைக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் உண்மையில் நாட்டில் அமைதியை கொண்டுவரவில்லை.
இவ்வாறான பின்னணியில் அனுர குமார திஸநாயக்க மூன்று நாள் விஜயமாக டிசம்பர் 15 அன்று புதுடில்லி சென்றார்.
தமது அதிகாரபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சம்பிரதாய ரீதியாக சந்தித்த பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை சந்தித்து உரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
“இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலையடைந்த பின்னர் சந்தேகத்திற்கு இடமின்றி, மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு பயணமாகிறார்” என கஜேந்திரகுமார் பொன்னம்பல் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இன மக்களும் எப்படி இணைந்து வாழ்வது என்பது தொடர்பில் இலங்கை புதிதாக சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், நாடு விடுதலையடைந்த பின்னர் ஏற்பட்ட இன மோதலுக்கு பெரும்பான்மையின கொள்கையே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
“கடந்த 75 ஆண்டுகள்காக கொள்கைகள் ஒரே மாதிரியாகத்தான் இருந்துள்ளன. மேலும் நாட்டில் இடம்பெற்ற இன மோதலே நாட்டை இன்று இந்தளவிற்கு கொண்டு நிறுத்தியுள்ளது. நாடு பொருளாதார ரீதியில் மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் வங்குரோத்து நிலையில் உள்ளது”.
இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள வெளிப்படையான கடிதத்தில், நாட்டின் இனப்பிரச்சனைக்கான அடிப்படை காரணத்தைச் சுட்டிக்காட்டியதோடு, அது களையப்படாவிட்டால், அரசியல் தீர்வு என்பது சாத்தியமாகாது என்று குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் தொடரும் இன மோதலுக்கு அடிப்படை காரணங்களில் ஒன்று ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பு. நாட்டில் 13ஆவது சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பு இருக்கும்வரை, ஆக்கபூர்வமான சுய உரிமை மற்றும் சுயாட்சியை அடைய முடியாது என்ற காரணத்தினால் அதை தமிழர்கள் நிராகரித்திருந்தனர்”.
13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துவதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டது என்பதை மென்மையாக தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த பகிர்வை இலங்கை நீதிமன்றங்களும் தடுத்து நிறுத்தியுள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
“இந்த நாட்டின் உயர்மட்ட நீதிமன்றங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த தீர்ப்புகளில், நாட்டில் ஒற்றையாட்சி நிலவும்வரை, அனைத்து அதிகாரங்களும் கொழும்பிலேயே குவிந்திருக்கும் என்று கூறி அதிகாரப் பகிர்வுக்கு எதிராக திர்ப்புகளை அளித்துள்ளன.
தமிழ் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்டு அதன் அடிப்படையில் தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்ப்பு காணப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கோரி வருகிறது. ஆனால் அந்த 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள பல அம்சங்களை நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று நாட்டின் உயர்மட்ட நீதிமன்றங்களை அணுகிய போது, மேற்கூறிய முடிவுகளே வந்துள்ளன”.
இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மூலம் அறிமுகமான 13ஆவது திருத்தச்சட்டம் அதன் நோக்கத்தை எட்டுவதில் தோல்வியடைந்துவிட்டது என்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதேவேளை அதிகாரப் பகிர்வு முழுமையாக அமல்படுத்தப்படுத்துள்ளதாக தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்களும் காட்டிக்கொண்டன என்று கூறியுள்ளார்.
அனுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசு, சமஷ்டி முறையிலான கட்டமைப்பிற்கு பதிலாக ஒற்றையாட்சி என்கிற முறையையே முனெடுக்க திட்டமிடுகிறது என்பதை இந்திய பிரதமரின் பார்வைக்கும் அவர் கொண்டுவந்துள்ளார். மேலும், இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் தான் இருக்கும் என்று அனுர குமார திஸநாயக்க மீண்டும் மீண்டும் சொல்லிவரும் நிலையில், புதிய அரசியல் யாப்பிற்கு ஒப்புதல் பெற பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் போது தமிழர்களின் கவலைகள் மற்றும் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்தும் அவர் தமது கடிதத்தில் எழுதியுள்ளார்.
”13ஆவது திருத்தச் சட்டமே பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படை என்று கூறுவதில் மேலும் கூடுதலாக அரசியல் ஆபத்து உள்ளது. யதார்த்த ரீதியில், தமிழர்கள் தமது வரலாற்றில் முதல் முறையாக ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்வதாகிவிடும். அப்படி இடம்பெறும் பட்சத்தில், தமிழர்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுகொள்வதன் மூலம் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுள்ளனர், எனவே இனி இலங்கையில் எந்த வகையிலும் இன மோதல்கள் இல்லை என்கிற நிலைப்பாட்டை இலங்கை அரசு முன்னெடுக்கும் ஆபத்து உள்ளது”.
இந்த காரணங்களுக்காகவே 13ஆவது திருத்தச் சட்டத்தை பேச்சுவார்த்தைக்கான தொடக்கப் புள்ளியாக கூட ஏற்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மறுக்கிறது என்பதையும் தனது கடிதத்தில் அவர் தெளிவாக்கியுள்ளார்.
“இந்த பேச்சுவார்த்தைகள் காத்திரமாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டுமென்றால், சிங்கள தேசத்தின் தலைவர்கள் தமது மக்களிடம், ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்று சமஷ்டி கட்டமைப்பை பரிசீலிப்பதால் மட்டுமே தீர்வு ஒன்று எட்டப்படும் என்று தமது மக்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் சட்டரீதியாக நாட்டில் ஒற்றுமையை உறுதி செய்ய கால அவகாசம் தேவைப்படும்”.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 13ஆவது சட்டத்திருத்தம், ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்று தமிழர்கள் பரிசீலிப்பதற்கான அடிப்படை வரம்புகளை கூட கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார். அது மாத்திரமின்றி புதிய அரசாங்கம் தொடர்பில் முன்னாள் மற்றும் இந்நாள் அரசுகள் முன்வைக்கும் வரைபு அரசியல் யாப்பு தமிழர்கள் பரிசீலிப்பதற்கான அடிப்படை எதிரார்ப்பைக்கூட நிறைவேற்றவில்லை என்றும் கூறும் அவர், தமது கட்சியும் தமது கருத்துக்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“அந்த பிரேரணைகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள், சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனி தமிழ் மற்றும் சிங்கள தேசங்களை அவர்களது இறையாண்மையுன் அங்கீகரிக்க வேண்டும். அவை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இருந்த அம்சங்களை மனதில் வைத்து அனுப்பப்பட்டன”.
புதிய அரசியல் யாப்பு சிங்களமயமாக இருப்பதை தமிழர்கள் நிராகரிப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டியுள்ளார்.
“சமஷ்டி முறைமைக்கு மாறாக ஒற்றையாட்சிக்குள் இருக்கும் எந்த முன்மொழிவையும் தமிழ் மக்கள் நிராகரிக்கும் போது அதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று எமது அமைப்பு ஆழமாக இந்தியாவை வலியுறுத்துகிறது. மேலும் தமிழர்களுக்கு உரிய ‘மறுக்க முடியாத சுய நிர்ணய உரிமையை’ உறுதிப்படுத்துவதுடன், தமிழ் தேசத்தை அங்கீகரித்து அதை பாதுகாக்கவும் இந்தியா ஆதரிக்க வேண்டும்.”
இந்தியாவின் நியாயமான தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தவும் தமது அர்ப்பணிப்பை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மோடிக்கு எழுதிய கடிதத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவை வெளியிட்ட 44 பக்க தீர்மானத்தில், இலங்கையிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம், இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடாக இருப்பதே என்று கூறியிருந்தது.
அந்த பேரவை பல்தேசியங்களை உள்ளடக்கிய இலங்கை தேசத்தை உருவாக்கிடவும், அதில் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தை பேணவும், அவர்களின் சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தவும், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்கவும் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது.
ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்ரமசிங்க ஆட்சியால் முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்பில் மேலும் சில திருத்தங்களைச் செய்து புதிய அரசியல் யாப்பின் வரைபை சமர்ப்பிக்க தேசிய மக்கள் சக்தி அரசு திட்டமிட்டு வருகிறது.