Friday, October 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (08) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (09) அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மாகாணங்களின் பல பகுதிகளில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments