Friday, October 9, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகல்

டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகல்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான தனஞ்சய டி சில்வா, அணித்தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என தான் கருதுவதாக தனஞ்சய டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கை அணிக்காக வீரராக தொடர்ந்து விளையாடுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனஞ்சய டி சில்வா டெஸ்ட் அணிக்கு வழங்கிய தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், தனஞ்சய டி சில்வாவின் கிரிக்கெட் வாழ்க்கையின் எஞ்சிய காலத்திற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பில் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments