Friday, October 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஞானசார தேரர் விவகாரம் – ஜனாதிபதியுடன் இன்று விசேட சந்திப்பு

ஞானசார தேரர் விவகாரம் – ஜனாதிபதியுடன் இன்று விசேட சந்திப்பு

கலகொடஅத்தே ஞானசார தேரர் பொது உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், முப்பீட மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விதம் தொடர்பில் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையிலேயே, குறித்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதிக்கும் மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments