Friday, October 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அனோஜனை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை

அனோஜனை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்து, அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

24 வயதான அனோஜன் சிவராசா, பேஸ்புக்கில் முஹம்மது நபி அவர்களை அவமதிக்கும் வகையிலான கருத்தொன்றை பதிவிட்டதாகக் கூறி 2026 ஜூலை முதலாம் திகதி கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. அந்தப் பதிவை பின்னர் நீக்கி, மன்னிப்பும் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் ஜூலை 27ஆம் திகதி அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்த நிலையில், செப்டம்பர் 17ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தியதாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டதிலிருந்து ஆரம்பத் தீர்ப்பு வழங்கப்படும் வரை சட்டத்தரணியை அணுகுவதற்கான வாய்ப்பு அனோஜனுக்கு மறுக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தியதற்காக ஒருவருக்கு சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை , சவூதி அதிகாரிகள் மரண தண்டனையை இரத்து செய்து, அனோஜனை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், 2026 ஒக்டோபர் 5ஆம் திகதி வரையான தகவல்களின் அடிப்படையில், இந்த ஆண்டில் சவூதி அரேபியாவில் குறைந்தது 175 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களில் குறைந்தது 94 பேர் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் எனவும் சபை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments