Friday, October 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடக்கு, கிழக்கில் மீண்டும் மழை அதிகரிக்கும்

வடக்கு, கிழக்கில் மீண்டும் மழை அதிகரிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி வலுவடைந்துள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14 முதல் 17ஆம் திகதி வரை கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கக்கூடும் எனவும், வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக அதிக மழை பெய்யக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் 18ஆம் திகதி அளவில் மற்றுமொரு காற்றுச் சுழற்சி உருவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments