தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளையொட்டி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் முன்னோட்ட வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் முன்னோட்டம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
–
பிரதீப் ரங்கநாதனின் “எல்ஐகே” படத்தின் முன்னோட்ட வெளியீடு தேதி அறிவிப்பு
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


