Friday, October 23, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்டுபாயில் நடைபெறவுள்ள சூர்யா 47 படத்தின் இசை வெளியீட்டு விழா

டுபாயில் நடைபெறவுள்ள சூர்யா 47 படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 47’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் இத்திரைப்படத்தில், சூர்யா பொலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மலையாள நடிகர்களான நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்திலிருந்து ‘ஆத்தி யார்ரா இவ’, ‘ஏரோபிளேன்’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஒக்டோபர் 25ஆம் திகதி மாலை 6 மணிக்கு டுபாயில் உள்ள சிலிகான் சென்ட்ரல் மொலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments